52 வயதிலும் சமந்தாவிற்கு குடைச்சல் கொடுக்கும் மாமியார் - வைரலாகும் வீடியோ!
நடிகை அமலா தமிழில் 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான "மைதிலி என்னை காதலி" படம் மூலம் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் அமலா.
அதியடுத்து அன்றைய காலக்கட்டத்தில் டாப் இளம் ஹீரோக்களான ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிளை, கமலுடன் சத்யா என பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களில் மேலும் மேலும் புகழ்பெற்றார். தமிழில் கிடைத்த அமோக வரவேற்பு தான் தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் அனைத்து மாநில சினிமாக்களும் அமலாவை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்றது.
இதையடுத்து 1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். மேலும் நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் தான் நடிகர் நாகசைத்தன்யா. நாகசைத்தன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சமந்தா கூட அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இல்லை. ஆனால் அவரது மாமியார் அமலா வீட்டில் இருந்தபடியே ஒர்க் செய்யும் வீடியோ வெளியிட்டு 52 வயதிலும் இப்படியா என பிரமிப்படைய வைத்துள்ளார்.