செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (15:37 IST)

பேமிலி மேன் சர்ச்சைகள்… சமந்தாவின் தமிழ் மேனேஜர் விளக்கம்!

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் தொடர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அது சம்மந்தமாக சமந்தாவின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது. ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது. ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் இந்த தொடர் வெளியாகிய பிறகு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் படுக்கையறை காட்சி புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் சமந்தா மட்டுமில்லாது அவரின் மேனேஜரான ஜெகதீஷ் என்பவருக்கும் கண்டனங்கள் எழுந்தன. ஏனென்றால் அவர்தான் சமந்தாவுக்கு அந்த சீரியலுக்கான வாய்ப்பை வாங்கி கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அது சம்மந்தமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘எனக்கும் அந்த சீரியல் வாய்ப்புக்கும் சம்மந்தம் இல்லை. அது சமந்தாவின் தெலுங்கு மேனேஜரால் ஒப்பந்தம் செய்யப்பட்டது’ என விளக்கமளித்துள்ளாராம்.