செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:54 IST)

சமந்தாவுக்கு என்ன ஆச்சு...? திடீர் சிகிச்சையால் ரசிகர்கள் பதற்றம்!

தெலுங்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா டோலிவுட்டின் பிரபல வாரிசு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருணம் செய்துக்கொண்டார். 4 வருட காதல் வாழ்க்கை யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில் விவாகரத்து ஆகிவிட்டது.
 
இந்நிலையில் சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள AIG தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர். 
 
இந்நிலையில் இது குறித்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ள சமந்தாவின் மேலாளர் மகேந்திர பாபு , சமந்தா AIG மருத்துவமனையில் சில பரிசோதனைகள் மேற்கொண்டு பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறினார். குறிப்பாக சமந்தா நலமாக இருப்பதாகவும் தேவையின்றி வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.