புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (10:28 IST)

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள் – அதிர்ச்சியில் சமந்தா

நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் “ஓ பேபி” படத்துக்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள் சமந்தா ரசிகர்கள்.

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து வருகிறார் சமந்தா. யூ-டர்ன் திரைப்படத்துக்கு பிறகு முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்கும் படம் ”ஓ பேபி”. நேற்று ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையே பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சமந்தாவுக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்திருக்கிறார்கள் சமந்தா ரசிகர்கள். இது சமந்தாவை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இதுகுறித்து சமந்தா “எனக்காக இவ்வளவு பெரிய கட் அவுட் வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் இருக்கிறது” என கூறியிருக்கிறார்.