சமந்தா தேங்காய் உடைக்க படும் பாடு; வைரலாகும் வீடியோ
நடிகை சமந்தா திரைப்பட துவக்க விழா பூஜையின்போது தேங்காய் உடைக்க முடியாமல் திணறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா-நாகசைதன்யா திருமணம் செய்துகொண்ட பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா இருவரும் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்கள். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி இருந்த நிலையில், அப்பட பூஜையின்போது படக்குழுவினர் தேங்காயை உடைக்கும்படி சமந்தாவிடம் கொடுத்தனர்.
இந்நிலையில் சமந்தாவும் அதனை உடைக்க பலமுறை முயற்சி செய்தும் தேங்காய் உடையவில்லை. எனவே உடன் இருந்த படக்குழுவினர் தேங்காயை வாங்கி உடைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
இது குறித்து சமந்தா ட்விட்டரில்,
The story of my life .. the one reason I don’t like attending movie openings