ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (22:16 IST)

நயன்தாராவை ஓரங்கட்டிய சமந்தா

நயன்தாரா நடிக்க இருந்த கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில், இப்போது சமந்தா நடிக்க இருக்கிறார்.
பவண் குமார் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படம் ‘யு டர்ன்’. பவண் குமாரே தயாரித்த இந்தப் படம், பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். பத்திரிகையாளராக அவர் நடித்திருந்தார்.
 
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை ரீமேக் செய்ய, பல போட்டிகள் நடந்தன. ‘அறம்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது சமந்தா நடிக்கப் போகிறார்.
 
கன்னடத்தில் இயக்கிய பவண் குமாரே தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இரண்டு மொழிகளிலுமே சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார்.