ரோபோ சங்கருடன் முதல் முறையாக இணையும் சமந்தா
காமெடி நடிகர்களுடன் பிரபல ஹீரோயின்கள் இணைவது கோலிவுட்டில் ஒன்றும் புதியதில்லை. கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் ஆகியோர் ஹீரோவாக புரமோஷன் பெற்றவுடன் பிரபல ஹீரோயின்கள் அவர்களுடன் இணைந்து நடித்தனர்.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோசங்கர். இவர் தற்போது விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' என்ற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷாலுக்கு முதல்முறையாக ஜோடி சேரும் சமந்தா, ரோபோ சங்கருடன் இணைந்து காமெடி காட்சிகளிலும் நடித்து வருகின்றாராம். ரோபோசங்கர் மற்றும் சமந்தாவின் காமெடி காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
யார் கண்டது, நாளை ரோபோ சங்கர் ஹீரோ ஆனால், சமந்தா ஜோடியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை