சாவித்திரி வாழ்க்கை படம்: மோதும் நடிகைகள்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (17:49 IST)
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு டைரக்டர் நாக அஸ்வின் படமாக எடுக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. 

 
 
விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கான திரைக்கதையை பழைய நடிகர்-நடிகைககள் மற்றும் சாவித்திரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசி தயார் செய்து இருக்கிறார் இயக்குனர்.
 
இரண்டு கதாநாயகிகள் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
இவர்களில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்பது ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :