செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (15:06 IST)

விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்

அஜித் நடிக்கும் அடுத்த படமான 'தல 58' திரைப்படத்தை இயக்குனர் சிவாவும், விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 62' திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் இயக்கவுள்ளது தெரிந்ததே. இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க இளம் இசையமைப்பாளரான சாம் சிஎஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் இசையமைத்த 'விக்ரம் வேதா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஒரே நேரத்தில் தல, தளபதி என இரண்டு பெரிய நடிகர்கள் படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள Mr.சந்திரமெளலி என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தல, தளபதி நடிக்கும் இரண்டு படங்களிலும் சாம் இசையமைப்பது உறுதியானால் அவர் கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பட்டியலில் இணைந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.