1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (14:47 IST)

சகுனி இயக்குனரின் வீர தீர சூரன்

விஷ்ணுவை வைத்து, வீர தீர சூரன் என்ற படத்தை சுசீந்திரன் இயக்குவதாக இருந்தது. சண்டை என்றாலே பயப்படும் ஒரு போலீஸ்காரரைப் பற்றிய கதையிது.

இந்த கதாபாத்திரத்தைதான் சற்று மாற்றி பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு தந்தார் சுசீந்திரன். அதனால், வீர தீர சூரன் படம் இனி டேக் ஆஃப் ஆகாது என்று இன்டஸ்ட்ரியில் பேசி வந்தனர்.
 
மாறாக அதே விஷ்ணுவை வைத்து வீர தீர சூரன் படம் தொடங்கப்பட உள்ளது. படத்தை இயக்குவது சுசீந்திரன் அல்ல, சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள்.
 
மெட்ராஸில் அறிமுகமான கேத்ரின் தெரேஸா ஹீரோயின். படம் குறித்த அதிக தகவல்களை விரைவில் படக்குழுவே வெளியிட உள்ளது.