ஜூனியர் என் டி ஆரின் ‘தேவரா’ படத்தில் சைஃப் அலிகானின் கேரக்டர் லுக் ரிலீஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமான இதற்கு தேவரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நேற்று சைஃப் அலிகானின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவர் நடிக்கும் பைரா கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.