அடடா நம்ம சாய் பல்லவியா இது? சின்ன வயசுல சொப்புசிலை மாதிரி அழகாக இருக்காங்களே!
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி 2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி, தமிழில் ஒரு சில படங்களில் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நேச்சுரல் அழகியாக சினிமாவில் ஒரு புதிய பிம்பத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மனத்தில் நல்லதோர் இடத்தை தக்க வைத்தார். தொடர்ந்து செலக்ட்டிவான ரோல்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது அழகான சேலையில் வந்து அனைவரையும் கவர்ந்திழுப்பார். இந்நிலையில் தற்போது சாய்பல்லவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கியூட்டான போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.