லிப் லாப் காட்சியில் இருந்து இப்படிதான் தப்பித்தேன் – சாய்பல்லவி சொன்ன ரகசியம்!
பிரபல நடிகையான சாய்பல்லவி தான் லிப் லாக் காட்சியில் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.
பிரேமம் படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான சாய் பல்லவி, தமிழில் ரவுடி பேபியாக மாறி போட்ட ஆட்டம் 100 கோடி பேர்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் கவனமாகவே தன் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது தெலுங்கில் வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடித்த படத்தில் இயக்குனருக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார். அதில் அந்த படத்தின் இயக்குனர் லிப் லாக் காட்சியில் நடிக்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை என சொல்லிவிட்டேன். ஆனாலும் அவர் என்னை வற்புறுத்தினார். இதையடுத்து அந்த படத்தின் ஹீரோ அந்த இயக்குனரிடம் அவர் உங்களைப் பற்றி மீ டுவில் சொன்னால் என்ன செய்வீர்கள் எனக் கேட்க இயக்குனர் தன் முடிவை மாற்றிக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.ஆனால் அந்த இயக்குனர் மற்றும் கதாநாயகன் யார் என்பதை சொல்லவில்லை.