1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (17:48 IST)

அக்காவுக்கு தங்கை கொஞ்சமும் சளைத்தவளல்ல - பட்டய கிளப்பும் சாய் பல்லவியின் தங்கை!

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் தனுஷுடன் மாரி - 2 படத்தில் நடித்து ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடி எல்லோரையும் கவர்ந்தார்.

இப்படி தமிழ் , தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகியாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சாய்பல்லவிக்கு விருப்பு வெறுப்பு இன்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவரது பந்தா இல்லாத நடத்தையும் எப்போதும் ஒரே சீராக இருக்கும் குணமும் மக்களுக்கு பிடித்துவிட்டது.

சாய் பல்லவியின் நடனத்திற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்நிலையில் தற்ப்போது சாய் பல்லவியின் தங்கை பூஜா அக்காவை போலவே நடனத்தில் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தி பாடலுக்கு பாவாடை தாவணியில் மஜாவாக நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அக்காவின் ரசிகர்களை தன் சாயலுக்கு கொண்டு வந்துட்டார். இதோ அந்த மினி சாய் பல்லவியின் ஆட்டத்தை பாருங்க..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dancing the blues away !