Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாலியல் தொழிலாளியான அஜித் ஹீரோயின்

cauveri manickam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (18:05 IST)
அஜித்துக்கு ஜோடியாக நடித்த சதா, ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.
 
‘ஜெயம்’ படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள சதா, மிக வேகமாக முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். விக்ரம் ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பிறகு பெரிதாக எந்தப் படமும் இல்லை.

ஏறியது போலவே வேகமாகவும் சறுக்கினார். பிற மொழிகளில் ஒரு பாட்டுக்கு ஆடுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருப்பது என்று காலத்தைக் கடத்திவந்த சதா, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘டார்ச் லைட்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா.


இதில் மேலும் படிக்கவும் :