வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (16:01 IST)

சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ் படத்தின் வசூல் நிலவரம்!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம். சச்சினின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு சச்சின் பல கோடி கனவுகள் என்ற திரைப்படம் ரிலீஸாகி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

 
சச்சின் என்றாலே கிரிக்கெட் என்பது மட்டுமே நமக்கு தெரியும் அதையும் தாண்டி அவரின் வாழ்வில் நடந்த பல விஷயங்களை  இதில் படமாக்கியுள்ளனர். இதனால், பலரும் இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு இருந்த நிலையில், எதிர்ப்பார்த்ததை விட பல கோடிகளை இப்படம் அள்ளியுள்ளது. 4 நாள் முடிவில் இப்படம் ரூ 32.25 கோடி வசூல் செய்துள்ளது, வெளிநாடுகளில் இப்படம்  ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வார இறுதி நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளது.  சச்சின் என்ற ஒரேயொரு பெயருக்காக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.