செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (09:46 IST)

“விஜய் இல்லை… இவரைதான் இயக்க ஆசைப்படுகிறேன்…” சஞ்சய் குறித்து SAC பகிர்ந்த தகவல்!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்படம் குறித்த படிப்பை முடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கவனிக்கப்பட்டு செய்தியாக்கப்படுகின்றன. இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் திரையுலகில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையில் சமீபத்தில் சஞ்சய்யின் தாத்த எஸ் ஏ சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில் “சஞ்சய்யிடம் பேசும் போது நீ எளிதாக இயக்குனர் ஆகிவிடலாம். ஏனென்றால் உன் தந்தை ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்று கூறினேன். ஆனால் அவரோ விஜய்யை இயக்காமல் முதல் படத்தில் இயக்க மாட்டேன். விஜய் சேதுபதியைதான் இயக்குவேன் எனக் கூறியுள்ளார்” என்று வெளிப்படுத்தியுள்ளார்.