புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (00:20 IST)

மீண்டும் பாகுபலி படத்தை இயக்கும் எஸ்.எஸ்.ராஜமெளலி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனதோடு, வசூலையும் அள்ளி குவித்தது. இந்த நிலையில் இயக்குனர் ராஜமெளலி தற்போது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



 
 
அதாவது 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் எடிட் செய்து அதாவது முக்கியத்துவம் இல்லாத காட்சிகளை கட் செய்துவிட்டு, ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைத்துவிட்டு இரண்டையும் சேர்த்து ஒரே படமாக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் இரண்டு படங்களில் உள்ள போர்க்காட்சியும் இந்த படத்தில் இருக்குமாம்
 
சுமார் மூன்று மணி நேரம் ஓடும் படமாக தயார் செய்யும் ராஜமெளலி, இந்த படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இரண்டு படங்களையும் இணைத்து பார்க்கும் அனுபவம் ரசிகர்களுக்கு மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது