1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:05 IST)

விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு மறைமுக கண்டனம் தெரிவித்த கமல்-ரஜினி இயக்குனர்

பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசியது கடந்த நான்கு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’, கமல்ஹாசன் நடித்த ‘சிங்காரவேலன்’, விஜயகாந்த நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜய்யை மறைமுகமாக தாக்கியும் ‘பிகில்’ பட டைட்டிலுக்கு கண்டனம் தெரிவித்தும் சினிமா விழா ஒன்றில் பேசினார். அவர் பேசியதாவது:
 
தமிழில் தலைப்பு வைத்ததற்காகவே இந்தப் படத்தின் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். ‘தமிழைக் காப்பாற்றப் போகிறேன்’, ‘நான் தமிழன்’, ‘தமிழ்நாடு நல்லாருக்கணும்’ என்று சொல்கிறவர்கள் வைக்கும் படத்தின் தலைப்பு அசிங்கமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு வைக்கிற தலைப்புகளைப் பார்த்தீங்கன்னா...
 
கலைஞர், ஜெயலலிதா காலத்தில் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு அளித்தனர். வரிவிலக்குக்காக மட்டுமே தமிழை நேசிப்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. தமிழர்களுக்காகப் போராடுகிறவர்கள், தமிழைப் பற்றிப் பேசி புகழ்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்...
 
பேசாத ஹீரோக்கள் எல்லாம் இன்றைக்கு மேடையில் அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். எனக்கு ஒண்ணும் புரியல. ரொம்ப அமைதியா இருப்பாரேப்பா... அவர் ஜாஸ்தி பேசுறாரே... எதுவும் விஷயம் இருக்குதா? என்று யோசித்தேன். படத்தின் தலைப்பை முதல்ல தமிழ்ல வைங்க. ‘அந்த’ப் படத்தின் தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று நேற்று முழுவதும் நிகண்டுவில் தேடினேன். அது தமிழ் வார்த்தையே இல்லை எனத் தெரிந்தது. நான் எந்தப் படத்தைச் சொல்கிறேன் எனக் குறிப்பிடவில்லை.
 
சினிமாவில் ஆயிரத்தெட்டு வசனங்கள் எழுதிக் கொடுக்கலாம். அதை ஒரு ஹீரோ பேசிவிடலாம். ஆனால், மேடைக்கு வரும்போது எதார்த்தமாக இருக்க வேண்டும். ரஜினி மேடையில் எதார்த்தமாகத்தான் பேசுவார். எனவே, நாம் எல்லோரும் மேடையில் எதார்த்தமாகவே இருக்க வேண்டும். மேடைகளில் பஞ்ச் டயலாக் தேவையில்லை” இவ்வாறு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்