1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (15:23 IST)

நம்பர் ஒன் ட்ரெண்டிங்: 2 மில்லியனை நெருங்கும் ருத்ர தாண்டவம் ட்ரைலர்!

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.
 
”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நேற்று வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்த இந்த ட்ரைலர் தற்போது 1.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.