1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (20:57 IST)

RRR படத்தின் இமாலய சாதனை…. ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல்!

RRR படம் இதுவரை உலகளவில் திரையரங்குகளின் மூலமாக சுமார் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படத்துக்கு செய்யப்பட்டுள்ள வியாபாரம் பற்றிய தகவல் சினிமா உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தை பேன் இந்தியா படமாக்கி செம்மையாக தயாரிப்பாளருக்கு கல்லா கட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி என்று கருத்துகள் சொல்லப்பட்டன.

முதல் நாளில் மட்டும் இந்த படம் சுமார் 223 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இது பாகுபலி இரண்டாம் பாகத்தை விட அதிகம். இந்நிலையில் தற்போது படம்  வெளியாகி 16 நாட்களுக்கு பிறகு 1000 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது.