1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (17:42 IST)

''வாரிசு'' படத்தைப் பார்த்து பாராட்டிய ஆர்.ஆர்.ஆர் பட நடிகர்!

varisu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் வாரிசு படத்தைப் பாராட்டியுள்ளார் ஆர்.ஆர்.ஆர் பட நடிகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நேரடி தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் இப்படத்தை விஜய்யை தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னைக்கு வந்த ஆர். ஆர்.ஆர்  நடிகர் ராம் சரணுக்கு  நடிகர் விஜய்யின் அனுமதியுடன் தில் ராஜூ இப்படத்தைப் போட்டு காண்பித்துள்ளார்.

இதைப்  பார்த்த  ராம்சரண் நடிகர் விஜய்யையும், படக்குழுவையும் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை தெலுங்கு நடிகர் ராம்சரண் பாராட்டியுள்ளதால், இப்படம், அனைத்து மொழிகளிலும்  குறிப்பாக தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.