1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (14:56 IST)

உடல் எடை குறைந்து ஆளே மாறியது எதனால்?.. முதன் முதலாக மனம் திறந்த ரோபோ ஷங்கர்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். பல முன்னணி நடிகர்களோடு நடித்து, தற்போது பிரபலமாக உள்ள ரோபோசங்கர், ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார். தற்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார்.

நல்ல அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிக்கப்பட்டதே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் தரப்பில் இருந்து எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இப்போது அவரே உடல்நலப் பாதிப்பு குறித்து யுட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் “நான் உடல் எடை குறைவதற்காக டயட்டில் இருந்தேன். அப்போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து, உடல்நிலை மோசமானது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். இப்போது உடல்நிலை சரியாகி எடை கூடியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.