செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (19:48 IST)

முதல் முறையாக அஜித்துடன் இணையும் ரோபோ சங்கர்

அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் காமெடியனாக ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார், வெற்றி  ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளி அன்று  ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்‘விஸ்வாசம்’படத்தில் காமெடியன்களாக  தம்பி ராமையா மற்றும் யோகி பாபு  நடிப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.