படையப்பா படத்தில் நடித்துள்ளாரா ரோபோ சங்கர்! பல ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட தகவல்!
நகைச்சுவை நடிகராக இப்போது திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ ஷங்கர் படையப்பா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் வெகுசில நகைச்சுவை நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர். விஸ்வாசம் படத்தில் இவர் அஜித்துடன் நடித்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் அவர் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து பிரலம் ஆனவர்.
ஆனால் அதற்கும் முன்னதாகவே அவர் படையப்பா படத்தில் ஒரு பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதை அவரே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.