பாலா படத்திற்காக கட்டான உடலை தொங்கிப்போன தொப்பையாக மாற்றிய நடிகர்!
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலா நடிகர்களின் கனவு இயக்குனராக பார்க்கப்படுபவர். இவரது படத்தில் நடக்க வாய்ப்பு கிடைக்காத என ஏங்கிய பல நடிகர்கள் இங்கு ஏராளம் உண்டு. அப்படியிருக்க "வர்மா" படம் அவரது திரை வாழ்க்கையே திருப்பி போட்டுவிட்டது.
இதனால் மிகுந்த அப்செட்டில் இருந்து மீண்டு வந்த இயக்குனர் பாலா தற்போது இன்னொரு புதிய படத்தை இயக்குகிறார். அதில் தாரை தப்பட்டை பட வில்லன் ஆர்கே சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் மருது, தர்மதுரை , வேட்டை நாய், ஸ்கெட்ச், ட்ராபிக் ராமசாமி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் விஜய்யின் சர்க்கார் படத்துடன் மோதியதால் படு தோல்வி அடைந்தது.
தயாரிப்பாளராக தனது கேரியரை துவங்கி பின்னர் நடிகராக நடிக்க துவங்கிய ஆர்கே சுரேஷ் தனது உடலை பிட்டாக வைத்திருப்பார். ஆனால், தற்போது இயக்குனர் பாலா படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி 73 கிலோவாக இருந்த உடலை தற்போது 95 கிலோ ஏற்றி தொந்தியும் தொப்பையுமாக மாறியுள்ளார். எனவே இந்த படத்தில் அவரது ரோல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.