1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (12:35 IST)

இனி ஈவிபி-யில் படப்பிடிப்பு இல்லையா? ஆர்.கே.செல்வமணி அதிரடி அறிவிப்பு!

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று முன்தினம் இரவு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர் என்பதும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி  அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் கூறியதாவது: முன்பெல்லாம் படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் கிரேன்களின் உயரம் 20 முதல் 40 அடி உயரம் மட்டுமே இருக்கும். இவை எல்லாம் திரைத்துறையினரால் பயன்படுத்தப்படும் கிரேன்கள் ஆகும் 
 
ஆனால் தற்போது 100 அடி 200 அடி உயர கிரேன்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்துகிறார்கள் இது தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் கிரேன்கள் ஆகும் இந்த கிரேன்களை இயக்கும் தொழில்நுட்ப அறிவு திரைப்பட டெக்னீஷியன்களுக்கு கிடையாது. அதே போல் இந்த கிரேனை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது இந்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் தான் இவ்வகை விபத்துக்கள் ஏற்படுகிறது 
 
இந்த நிலையில் இனிமேல் பாதுகாப்பை உறுதி செய்யாத நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்ய மாட்டோம் என்பதை உறுதி கூறுகிறோம். ஆங்கில திரைப்படத்துறைக்கு இணையாக பாதுகாப்புகள் இனி தேவை. படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோ முழுக்க முழுக்க பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு அமைப்புகள் இருக்கிறது என்பதை உறுதி செய்த பின்னரே எங்கள் தொழிலாளர்கள் பணிக்கு வருவார்கள்
 
ஏவிஎம் விஜயா போன்ற ஸ்டூடியோக்களின் உரிமையாளர்களே தயாரிப்பாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு திரைத்துறையில் ஏற்படும் பிரச்சனைகள் தெரியும். ஆனால் தற்போது ஸ்டுடியோ வைத்துள்ளவர்களுக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. வெறும் லாப நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் குறிப்பாக ஈவிபி ஸ்டுடியோவில் எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. எனவே இனிமேல் அவர்கள் பாதுகாப்பு அம்சங்களை ஈவிபி அமைக்கவில்லை என்றால் அதில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று ஆர்கே செல்வமணி கூறியுள்ளார். ஆர்கே செல்வமணியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது