புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (18:06 IST)

"வல்லவன்" படத்தில் வைஷ்ணவி! அவருக்கே தெரியாதாம்! முழு விவரம் இதோ!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 


 
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் படவாய்ப்புகள் கிடைத்து படு பேமஸ் ஆகி வருகின்றனர்.
 
ஆனால், வைஷ்ணவி இது வரை எந்த படத்திலும் நடித்தது. கிடையாது இந்த நிலையில் சிம்பு நடிப்பில் 2006 ம் வருடத்தில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் படத்தில் வந்திருக்காங்க. ஆனால் இந்த விஷயம் அவங்களுக்கே தெரியாதாம். 


 
வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம் அப்போது வல்லவன் படத்திற்காக ஷூட்டிங் அந்த பள்ளியில் நடந்துள்ளது. இதனை தொலைக்காட்சில் எதார்த்தமாக பார்த்த வைஷ்ணவி புகைப்படமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.