சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் ! – பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்

Last Updated: வியாழன், 29 நவம்பர் 2018 (20:49 IST)
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘மெரினா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். அதனையடுத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன்' என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.
தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கனா'. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்ததோடு, ஒரு பாடலும் பாடி, கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி' சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ஷிரின் என்பவர் டூயட் பாடி ஆடவுள்ளார். இதனை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ளார்.
 
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது. 


இதில் மேலும் படிக்கவும் :