புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:44 IST)

கும்பலாக நிற்க வேண்டாம்: அறிவுரை கூறிய பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்

அறிவுரை கூறிய பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்
தனது வீட்டின் அருகே கும்பலாக நிற்க வேண்டாம் என்றும் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடியுங்கள் என்றும் அறிவுரை கூறிய தமிழ் நடிகர் ஒருவரை தாக்க முயற்சித்ததாகவும், கொலை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் ரியாஸ்கான். இவரது மனைவி உமா ரியாஸ் கானும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சென்னை பனையூர் ஆதித்யராம் நகர் எட்டாவது தெருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரியாஸ்கான் வீட்டின் முன் சுமார் 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது 
 
இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி கும்பலாக நிற்க வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடியுங்கள் என்றும் நடிகர் ரியாஸ்கான் அவர்களிடம் அறிவுரை கூறினார்
 
இந்த அறிவுரையை ஏற்காமல் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒரு சிலர் ரியாஸ்கானை தாக்க முயற்சித்ததாகவும், ஒரு சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் ரியாஸ்கான் புகார் அளித்ததை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் ரியாஸ்கானை மிரட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்