வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (11:22 IST)

டிசம்பர் 23 வெளியாகிறது தரமணி

டிசம்பர் 23 வெளியாகிறது தரமணி

ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தரமணி திரைப்படம் டிசம்பர் 23 வெளியாகும் என அறிவித்துள்ளனர். 
 
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம், தரமணி. ஐடி நிறுவனப் பின்னணியில் நடக்கும் காதல் கதையிது. இதன் படப்பிடிப்பு முடிந்து மாதங்களாகிறது, இன்னும் படம் திரைக்கு வரவில்லை. 
 
இந்நிலையில், நவம்பர் 20 படத்தின் பாடல்களை வெளியிட்டு, டிசம்பர் 23 படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தரமணிக்கு யுவன் இசையமைத்துள்ளார்.