வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (18:22 IST)

ஜுன் 17 வெளியாகும் அச்சம் என்பது மடமையடா பாடல்கள்

ஜுன் 17 வெளியாகும் அச்சம் என்பது மடமையடா பாடல்கள்

கௌதம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் வரும் 17 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது.


 
 
அச்சம் என்பது மடமையடாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதலில், தள்ளிப் போகாதே என்ற தனிப்பாடலை வெளியிட்டனர். அப்பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக இளையஞர்கள் மனதில் இடம்பிடித்தது. அடுத்து ராசாளி என்ற பாடலை வெளியிட்டனர். அதையும் இளைஞர்கள் விரும்பி கேட்டு வருகின்றனர். முக்கியமாக, ரஹ்மான் இதற்கு முன் இசையமைத்த 24 படப்பாடல்களைவிட இவ்விரண்டு பாடல்களும் சிறப்பானவை. 
 
ஜுன் 17 அச்சம் என்பது மடமையடா படத்தின் அனைத்துப் பாடல்களையும் வெளியிடுகின்றனர். ரஹ்மான் ரசிகர்களுக்கு அன்று திருவிழாவாக இருக்கப் போகிறது.