ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (20:57 IST)

மீண்டும் இணையும் ’சூரரைப் போற்று’ பட கூட்டணி!

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படம்  வெளியாகி ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த ஆண்டு இயக்குநர் சுதரா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. ஏர்., டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமர் இசையமைத்தார்.  

இந்நிலையில், நடிகர் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது.