வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:20 IST)

மோகன் ராஜா vs தியாகராஜன் – ஈகோ மோதலால் கை நழுவிப்போன வாய்ப்பு!

நடிகர் பிரசாந்த் நடிக்க மோகன் ராஜா இயக்க இருந்த அந்தாதூன் ரீமேக் படத்தில் இருந்து மோகன் ராஜா விலகியது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில் மோகன் ராஜா விலகியது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ஒரு கோடிக்கும் மேல் அட்வான்ஸ் வாங்கிய மோகன் ராஜா நெடுநாள் ஆகியும் படத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கவே இல்லையாம். இதனால் கடுப்பான தியாகராஜன் கொடுத்த  அட்வான்ஸை திருப்பிக் கேட்க அதிர்ச்சியாகியுள்ளாராம் மோகன் ராஜா. பின்னர் ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிவில் பின் தேதியிட்ட காசோலை ஒன்றை அவர் கொடுத்துள்ளாராம்.

Source வலைப்பேச்சு