புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (11:45 IST)

கொஞ்சம் கலர் கம்மியா இருந்தாலும் கிராமத்து ரோல்தான்! – ராதிகா ஆப்தே காட்டம்!

இந்திய சினிமாவில் இன்றும் நிற வேற்றுமை தொடர்ந்து வருவதாக நடிகை ராதிகா ஆப்தே குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்தி படங்களிலும், சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராதிகா ஆப்தே ”இந்திய சினிமாவில் நிற பாகுபாடு இன்றுமே உள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள புதுமுக நடிகைகளில் யாராவது நிறம் குறைவாக இருந்து பார்த்துள்ளீர்களா? நீங்கள் சற்று நிறம் குறைவாக இருந்தாலும் கிராமத்து பெண் வேடம்தான் தருவார்கள்” என கூறியுள்ளார்.