ராஷ்மிகா செய்த திருட்டுத்தனம்… இதெல்லாம் ஒரு கிக்குக்காக பன்றதுதானே!
நடிகை ராஷ்மிகா தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஒரு பொருளை திருடிச் சென்றுள்ளதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார். இவரின் எக்ஸ்பிரஷன்ஸ்களுக்காகவும், ஜாலியான சுபாவத்தாலும் பலர் இவரின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் சொன்ன தகவல் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் செய்த திருட்டு சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த தலையணை உறை மிகவும் அழகாக இருந்ததால் அதை திருடிச் சென்றதாக சொல்லியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் ’இதெல்லாம் ஒரு கிக்குக்காக பண்ற சின்ன சின்ன திருட்டுதானே’ என ராஷ்மிகாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.