திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (10:10 IST)

ராஷ்மிகாவின் கிளாமர் காட்சிகளை நீக்கும் புஷ்பா படக்குழு!

புஷ்பா படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ராஷ்மிகா நடித்துள்ள காட்சிகளை நீக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 175 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக படத்தின் நீளம் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள கிளாமர் காட்சிகளும் குடும்ப ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் இப்போது ராஷ்மிகாவின் கிளாமர் காட்சிகள் சில நீக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.