புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (12:20 IST)

உன் நாக்கை அறுத்துவிடுவேன்... ராஷ்மிகாவிடம் மோசமாக நடந்துகொண்ட நடிகர் - வீடியோ!

கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிலும் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது கன்னடத்தில் "பொகரு" எனும் படத்தில் நடித்துள்ளார். துரு சர்ஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படம்  ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதையடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதத்தில் இப்படத்தில் இடம்பெறுள்ள "கராபு" எனும் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அதில்  ராஷ்மிகாவை காதலிக்க சொல்லி மோசமான வார்த்தைகளை பேசி ஹீரோ முரட்டுத்தனமாக நடந்துகொள்வது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த பாடலில் காதலிக்கவில்லை என்றால் நாக்கை வெட்டுவேன், முடியை அருப்பேன் போன்ற வரிகள் ஒட்டுமொத்த பெண்களையும் அவதூறு படுத்தும் விதத்தில் உள்ளது. இப்படி ஒரு படத்தில் நடிக்க ராஷ்மிக ஏன் ஒப்புக்கொண்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதோ அந்த பாடல் வீடியோ...