செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (14:38 IST)

”இவர் கூட நடிச்சா ….” விஜய் சேதுபதி பற்றி மனம் திறந்த பாலிவுட் ஹீரோ!

ரன்பீர் கபூர் நடித்துள்ள ஷம்ஷேரா என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து தமிழகத்துக்கு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட ரன்பீர் கபூர் வருகை தந்துள்ளார். இவரை விஜய் டி வி புகழ் திவயதர்ஷினி நேர்காணல் செய்துள்ளார்.

அதில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ள ரன்பீர் கபூர் ” விஜய் சேதுபதி சிறந்த நடிகர். இவருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவர் கூட நாம் நடித்தால் இன்னும் சிறந்த நடிகராக முடியும். மக்கள் செல்வன் சார்… நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன் சார்.” எனக் கூறியுள்ளார்.