வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மே 2020 (08:35 IST)

முன்னாள் காதலிகளும் வாழ்த்து தெரிவித்தனர் – ராணா ஓபன் டாக்!

பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபாடி மஹீமா பஜாஜ் என்ற பெண்ணைக் காதலித்து வருவது டோலிவுட்டில் ஹாட் டாக்காக மாறியுள்ளது.

பாகுபலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ராணா இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தெலுங்கில் பல ஆண்டுகளாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். பல முன்னணி கதாநாயகிகளுடன் காதலில் விழுந்த அவர் பின்னர் அந்த காதல்களை முறித்துக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுகம் செய்தார்.

மஹீமா இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது தோழி லஷ்மி மஞ்சுவுடன் பேசிய அவர் ‘தனது காதலுக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் காதலிகள் மெஸேஜ் அனுப்பி இருந்தார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.