Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த ராணா


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:57 IST)
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் ராணா சென்றுள்ளார். 

 

 
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் மக்களிடையே எதிர்ப்பு எழுந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அனைவரும் அன்றாடம் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேச தொடங்கிவிட்டனர். 
 
அதேபோல் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் போதை விவகாரத்தில் நடிகை நடிகர்கள் சிக்கியது. அதில் ஒரு நடிகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது என பல சர்ச்சை எழுந்தது. தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பாகுபலி புகழ் ராணா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒரு சில மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த ராணா அங்கிருந்தவர்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடினார்.


இதில் மேலும் படிக்கவும் :