ஆத்தி ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த வில்லன் நடிகரா...?
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இடுப்பு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அரந்தாங்கி நிஷா மற்றும் ரக்சன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, உமா ரியாஷ் , ப்ரியங்கா சங்கர், தாடி பாலாஜி , ஞானசம்மந்தம் மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ரம்யா பாண்டியன் மற்றும் புகழ் இருவரது கலாட்டா செமையாக இருந்தது.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ரம்யா பாண்டியன், தனது சித்தப்பா அருண் பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "ஹேண்ட்ஸம் ஜென்டில் மேன் சித்தாபா" என்று கூறி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 1980, 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். நிறைய குணசித்திர வேடங்களில் நடித்த வில்லன் ரோலில் பக்காவாக பொருந்துவார். ஆனால், அவர் தற்போது நடிப்பதை விட்டு விட்டு படங்களை தயாரித்து வெளியிடுவதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவர் தான் ரம்யாவின் சித்தப்பா என தெரிந்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.