‘இறைவி’ படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், தனுஷ் இழுத்துக்கொண்டே போக, கடுப்பான கார்த்திக் சுப்பராஜ், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டார். சூட்டோடு சூடாக மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார்.
இந்தப் படத்தில், கேரக்டர் ரோலில் நடித்துவந்த இந்திரஜா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் நடித்த சனத் ரெட்டி, இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன், ரம்யா நம்பீசனும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும், கதையில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய கேரக்டரில் அவர் நடித்துள்ளார். பாண்டிச்சேரி மற்றும் கேரளா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.