1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (19:29 IST)

என்னடா இது ரம்யாவுக்கு வந்த சோதனை: ஆளாளுக்கு வறுத்து எடுக்குறாங்களே!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் தற்போது வரை சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது ரம்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 70 நாட்கள் குறித்த அனுபவத்தை கூறுங்கள் என்று பிக்பாஸ் கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து ஒவ்வொருவராக பேசியபோது அழுகாமல் வெளியே வந்த ஒரே போட்டியாளர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிரித்துக்கொண்டே அதேநேரத்தில் தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவுக்கு இன்று சோதனையான நாள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வாரம் கேப்டனாக இருந்த ரம்யாவின் செயல்பாடுகள் எப்படி என்பது குறித்து கமல்ஹாசன் கேட்டபோது ஆளாளுக்கு அவரை குறை சொல்லினர் 
 
குறிப்பாக ரம்யாவுக்கு கேப்டன் பொறுப்பை விட்டு கொடுத்த பாலாஜியும் அவரை குறை கூறினார். அதேபோல் அர்ச்சனா மற்றும் ஆரியும் ரம்யாவின் கேப்டன்ஷிப்பை குறை கூறினார்கள். இதற்கு ரம்யா விளக்கம் அளிக்க முயற்சித்தபோது கமல்ஹாசனும் அவர் செய்தது தவறு என்றும் ஒரு தலைவர் என்பவர் தனக்கு தெரியாது என்று சொல்லக்கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார் 
 
கமல்ஹாசன் உள்பட சக போட்டியாளர்கள் பலரும் ரம்யாவை இன்று வறுத்தெடுத்து இருப்பது அவருக்கு ஒரு சோதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது