ராமாயணம் முதல் பாகத்துக்கான ஷூட் முடிந்துவிட்டது… ரன்பீர் கபூர் அப்டேட்!
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
முதலில் இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவோடு இணைந்து அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி மற்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர்கள் அவர்கள் பிரிய நமீத் மல்ஹோத்ரா யாஷொடு இணைந்து தயாரிக்கிறார்.
இந்நிலையில் துபாயின் ஜெட்டா நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் இந்த படம் பற்றி பேசுகையில் “ராமாயணம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.” எனக் கூறியுள்ளார்.