வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (16:19 IST)

மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்கும் சாமான்யன் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வந்தார்.

நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்ற உறுதியோடு இருந்த அவர் மேதை படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் பெரிய திரையில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் மற்ற முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நாளை முதல் சென்னையில் தொடங்க உள்ளதாம்.