வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2014 (12:20 IST)

இளையராஜாவுக்கு ராம் கோபால் வர்மா செய்த மரியாதை

1989 ல் ராம் கோபால் வர்மாவின் முதல் படம் சிவா (தெலுங்கு) வெளியானது. தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியாகி இளைஞர்களை பைத்தியம் பிடிக்க வைத்தது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா.
 
சில வருடங்கள் முன்பு சிவாவை இந்தியில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ரீமேக் செய்தார் வர்மா. இளையராஜாதான் அப்படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அதனை சாதிக்கவும் செய்தார். ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருந்தாலும் வர்மா எப்போதும் வியக்கும், நான் அவரின் ஃபேன் என்று சொல்லிக் கொள்ளும் இசையமைப்பாளர் இளையராஜா.
 
வர்மா ரவுடி என்ற படத்தை தெலுங்கில் மோகன் பாபுவை வைத்து இயக்கியுள்ளார். மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும் படத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். படத்துக்கு இசை சாய் கார்த்திக்.
 
நாளை அமெரிக்காவிலும், நாளை மறுநாள் ஆந்திராவிலும் ரவுடி வெளியாகிறது. இந்தப் படத்தில் 1989 ல் சிவா படத்துக்கு இளையராஜா இசையமைத்த பின்னணி இசையை வர்மா பயன்படுத்தியுள்ளார். முழுக்க அல்ல, நாகார்ஜுனா சைக்கிளில் ரவுடிகளிடமிருந்து தப்பித்து செல்கையில் வரும் பின்னணி இசை. இந்த சேஸிங் காட்சியில் இளையராஜா அமைத்திருக்கும் பின்னணி இசையை கேட்கும் போதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் வரும். இளையராஜாவின் ரசிகனாக அவருக்கு செலுத்தும் ட்ரிப்யூட்தான் அந்த பின்னணி இசையை ரவுடியில் பயன்படுத்தியிருப்பது என்றார் வர்மா.
 
இளையராஜாவின் இசை காலங்கள் கடந்தும் நினைக்க வைப்பதற்கு இன்னொரு சான்று, வர்மாவின் இந்த ட்ரிப்யூட்.
 
 
 
 
cinema, entertainment, ilaiyaraja, ram gopal verma