வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (15:54 IST)

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமா? முட்டாள்தனமானது...ராம்கோபால் வர்மா

ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க நினைப்பது முட்டாள்தனம் என்று ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

 
நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் மரனமடைந்தார். இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப்பட துறையை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ராம்கோபால் வர்மா படமாக எடுக்க போவதாக செய்தி பரவியது. இதற்கு ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில்,
 
நான் ஸ்ரீதேவி வாழ்க்கையை படம் எடுக்க போவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை. ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க நினைப்பது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன். ஸ்ரீதேவியாக நடிக்க எந்த நடிகையாலும் முடியாது என்று நினைக்கிறேன்.