1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:36 IST)

எஸ்.எஸ்.ராஜமெளலியை கொலை செய்ய திட்டம்.. பிரபல இயக்குனர் ட்விட்

rajamouli
உங்களை கொலை செய்ய ஒரு குரூப் திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என எஸ்எஸ் ராஜமவுலிக்கு பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவுரை கூறுவது போல் ட்வீட் செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர்  திரைப்படம் கோல்டன் குளோப் விருதை வென்றது மட்டுமின்றி ஆஸ்கர் இறுதி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உள்பட பொறாமை கொண்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் உங்களை கொலை செய்ய ஒரு குழுவை உருவாக்கி உள்ளதால் நீங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
உங்களை கொலை செய்யும் குரூப்பில் உள்ளவர்களில் நானும் ஒருவன் என்று காமெடியாக அவர் கூறியிருந்தால்ம் எஸ்.எஸ்.ராஜமெளலி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அனுப்பி வைத்துள்ளது
 
மேலும் ‘ஷோலே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் சிப்பி உள்ளிட்ட இயக்குனர்களை எல்லாம் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள் என்றும் உங்களுக்காக தலைவணங்குகிறேன் என்றும் அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran