வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:46 IST)

“அயலான் வழக்கமான திரைப்படம் இல்லை…” எதிர்பார்ப்பை ஏற்றும் ரகுல் ப்ரீத் சிங் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பல்வேறு பொருளாதார சிக்கல்களில் சிக்கி, தயாரிப்பாளர் மாறி இப்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் படம் பற்றி பேசியுள்ளார்.

அதில் “அயலான் ஒரு வழக்கமான திரைப்படம் இல்லை. சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம்.  எனக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது. இந்த படத்தில் கிராபிக்ஸ் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது. அதனால் அதற்கான பணிகளும் அதிகமாக உள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தனித்துவமான அனுபவத்தை உணர்ந்தேன்.” எனக் கூறியுள்ளார்.